கோலாலம்பூர், பிப் 10 – சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்த ஊழல் தொடர்பான பதிவொன்றிற்காக, மூடா கட்சி மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
அந்த பதிவை பதிவேற்றம் செய்ய , தமது கட்சியின் தரப்பிலிருந்து அனுமதி தரப்படவில்லை என்றும் , தீய நோக்கத்திற்காக அத்தகையை பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்றும் அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் Luqman Long தெரிவித்தார்.
ஊழல் தொடர்பான சம்பந்தப்பட்ட பதிவு நேற்றிரவு கெடா, மூடா கட்சியின் சமூக அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த பதிவில், பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நெஷனல் ஆகிய அரசியல் கூட்டணியின் கொடிகளும், தேசிய முன்னணி, கெஅடிலான் முதலிய கட்சிகளின் கொடிகளும் இடம்பெற்றிருந்தன. அதில் ஊழல் பழக்கத்தினால் நாட்டை சீர்குலைத்து விட வேண்டாமென்ற குறிப்பும் இடம்பெற்றிருந்தது.
அந்த பதிவு மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தியிருப்பதாகவும், அந்த பதிவை அனுமதியின்றி வெளியிட்ட கெடா மூடா கட்சியின் தகவல் பிரிவு தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதாகவும் Luqman Long தெரிவித்தார்.