Latestமலேசியா

அரசியல் தலைவர்களின் இரவு விருந்தில் கவர்ச்சி நடனமா ?

கோலாலம்பூர்,  மார்ச்  6 – பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணியின் சில முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்,  கவர்ச்சி உடை அணிந்து பெண்கள் நடனமாடிய காணொளி  ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில், பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணியின்  தலைவர்  டான்ஶ்ரீ முஹிடின் யாசின்,  பெர்சத்து கட்சியின்  தலைமைச் செயலாளர்  ஹம்சா சய்னூடின் , கெரக்கான் கட்சியின்  தலைவர் டொமினிக் லாவ் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இதனிடையே, அந்த கவர்ச்சி நடனம்,  ஜோகூர் பாரு  ஆஸ்டின்  அனைத்துலக மாநாட்டு  மையத்தில்  நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் போது அரங்கேற்றப்பட்டுள்ளது.

அதன் தொடர்பான  காணொளி வைரலானதை அடுத்து,  அந்த நடனத்தை பெரிக்காத்தான் நெஷனல் ஏற்பாடு செய்யவில்லை எனவும், அப்பகுதியின் சீன வர்த்தக சமூகத்தினரே ஏற்பாடு செய்திருந்ததாகவும்   அக்கூட்டணியின்  நிர்வாக  செயலாளர்  சைபூல் அட்லி  மொஹமட்  அர்ஷாட் தெரிவித்திருக்கிறார்.

 

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!