Latestமலேசியா

அரசியல் நிதி தொடர்பான மசோதா நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர், செப் 24 – அரசியல் நன்கொடைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான நிதி தொடர்பான உத்தேச புதிய சட்டம் குறித்த மசோதா எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நவம்பர் மாதம் தொடக்கத்தில் அந்த மசோதா முதல் முறையாகவும் பின்னர் நவம்பர் மாத இறுதியில் இரண்டாவது முறையாகவும் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும். சட்ட அமைச்சர் வான் ஜூனைடி துவாங்கு ஜபார் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார். அந்த மசோதா குறித்த கருத்துக்களை பெறுவதற்காக செப்டம்பர் 28 ஆம் தேதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தாம் கலந்துரையாடலை நடத்தப்போவதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!