Latestமலேசியா

கெடாவில் கடுமையாக வெப்பம் வறட்சி இருந்தபோதிலும் மூடா நெற்பயிர் பகுதியில் பாதிப்பில்லை.

அலோஸ்டார், பிப் 19 – கெடாவில் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி நிலை இருந்தாலும் மூடா நெற்பயிர் பயிரிடும் இடங்களில் பெரிய அளவிலான பாதிப்பில்லையென MADA எனப்படும் Muda விவசாய மேம்பாட்டு வரியம் தெரிவித்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் இரண்டாது நடவு காலத்தில் 100,011 ஹெக்டர் பரப்பளவில் 99.3 விழுக்காடு பகுதியில் நெல் சாகுபடி நடைபெற்றதாக Muda வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 38,282 ஹெக்டர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன. இதற்கு முன் 12,208 ஹெக்டர் பகுதியில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

வானிலை வறட்சியாக இருந்தபோதிலும், முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நடப்பு பருவத்திற்கான நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதாக MADA உறுதியளிக்கிறது. இப்பகுதியில் விவசாய முயற்சிகளை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான நீர்த்தேக்கங்கள் போதுமான நீர் வசதிகளை கொண்டுள்ளன. மேலும், அடுத்த மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் நடப்பு பயிர்ச் செயல்பாடுகளுக்கு இது தடையாக இருக்காது. வறட்சிக் காலத்தின் விளைவுகளைத் தணிக்க, அணைகளில் இருந்து நீர் சேமிப்பை மேம்படுத்த மறுபயன்பாட்டு பம்ப் நிலையங்களை மேம்படுத்துவதன் மூலம், செயலாக்க நடவடிக்கைகளை MADA தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், திறமையான நீர் விநியோகத்தை உறுதிசெய்யவும், நீடித்த விவசாய நடைமுறைகளை மேம்படுத்தவும் வீணாக்கப்படுவதைக் குறைக்கவும் விவசாயிகள் தண்ணீரை விவேகத்துடன் பயன்படுத்துமாறு MADA கேட்டுக்கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!