புத்ராஜெயா, செப்டம்பர்-30 – அரசு உதவிப் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பெரும் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
உண்மையிலேயே உதவித் தேவைப்படும் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து, உதவிகளை விநியோகிப்பதில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புவதாக அவர் சொன்னார்.
2025 வரவு செலவு அறிக்கைக்கு ஒரு முன்னோட்டமாக டத்தோ ஸ்ரீ அன்வார் அதனைத் தெரிவித்தார்.
அரசாங்க உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்றோரின் பிள்ளைகள், அரசாங்க நிதியில் செயல்படும் மிகச் சிறந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவது நியாயமற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
எனவே, அப்படி அனுப்பப்படும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதே சரியாக இருக்குமென்றார் அவர்.