
கோலாலம்பூர், மார்ச் 14 – நாட்டில் அரசாங்க சேவையில் வேலை செய்துவரும் ஒரு மில்லியன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில் 4.11 விழுக்காட்டினர் இந்தியர்கள் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் மற்றும் போலீஸ் படையை தவிர்த்து அரசாங்க சேவையின் தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் இருப்பதாக சபா, சரவா விவகாரங்கள் மற்றும் சிறப்பு பணிகளுக்கான பிரதமர்துறையின் அமைச்சர் Armizan Mohd Ali தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை பொதுச் சேவைத்துறையில் பணியாற்றி வரும் இந்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 41. 117 பேர் என தேசிய முன்னணி தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ எம். சரவணன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Armizan தெரிவித்தார்.