Latestமலேசியா

அரசு தரப்பு வழக்கறிஞரை சந்திப்பதில் தோல்வி கண்டால் நவீன் குடும்ப உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருப்பர்

பினாங்கு, ஜூன் 11- ஜூன் 22 ஆம் தேதிக்குள் அரசு தரப்பு வழக்கறிஞரை சந்திக்கும் தங்களது முயற்சி வெற்றிபெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கொலை செய்யப்பட்ட T.நவீனின் குடும்பத்தினர் மற்றும் நவீனின் நண்பர் அறிவித்துள்ளனர்.

நவீனின் குடும்பத்தினரும் நவீன் நண்பரும் உண்ணாவிரதத்தில் இருப்பது என முடிவு செய்துள்ளதாக சமூக இயக்கவாதியான அருண் துரைசாமி இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அடுத்த விசாரணை தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அதுவும் நேருக்கு நேர் அரசு தரப்பு வழக்கறிஞர் டி.பி,பி முகமட் அம்ரிலை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம். அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் பினாங்கு சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து சில விளக்கங்களையும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம் என நவீன நடவடிக்கை மற்றும விசாராணை அமைப்புக்கு தலைமையேற்றுள்ள அருண் துரைசாமி இணைய வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஏற்கனவே இது தொடர்பாக பினாங்கு சட்டத்துறை அலுவலகத்திற்கும் டி.பி.பி முகமட் அம்ரில் ஜொஹாரிக்கும் இது குறித்து கடிதம் எழுதியிருந்தபோதிலும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. நவீனின் தாயார் சாந்தி துரைராஜ், அவரது நண்பர் பிரவின் மற்றும் நானும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறோம் என அருண் துரைசாமி தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!