கோலாலம்பூர், பிப் 2 – கோழி விலையின் சில்லறை விலையை ஒரு கிலோவுக்கு
8 ரிங்கிட் 90 சென்னாக அரசாங்கம் நிர்ணயித்திருக்காவிட்டால் கோழி விலை 10 ரிங்கிட்டுக்கும் கூடுதலான உயர்ந்திருக்கும் என உள்நாடு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ Alexander Nanta Linggi கூறினார். கோழிப்பண்ணையின் செலவு 70 விழுக்காடு அதிகாரித்ததால் கோழி விலை உயர்ந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கோழிகளுக்கான சோளம் மற்றும் சோயாபீன் தீவனங்களின் விலை உயர்ந்ததால் கோழி மற்றும் முட்டை உற்பத்திக்கான செலவு அதிகரித்து விட்டதை உணவு உற்பத்தி தொழில்துறையுடன் நடைபெற்ற கூட்டத்தில் வாழ்க்கை செலவு மீதான தேசிய நடவடிக்கை மன்றம் தெரிவித்திசுட்டிக்காட்டியது. உற்பத்தி செலவு அதிகரித்ததைத் தொடர்ந்து கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்கும்படி அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்தை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Alexander Nanta சுட்டிக்காட்டினார்.