Latestமலேசியா

அரசு நிறுவனங்களில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் போதவில்லை; பிரதமரின் சிறப்பு கவனம் தேவையெனக் கோரிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-18 – அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் குறிப்பாக சட்டப்பூர்வமான அமைப்புகளில் மலேசிய இந்தியர்களின் பிரிதிநிதித்துவம் இருப்பதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிச் செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நடப்பில் Khazanah Malaysia, EPF, Telekom Malaysia, TNB, Petronas, PNB, Sime Darby உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது.

போலீஸ் ஆணையம், ஏன் மலேசிய மனித உரிமை ஆணையமான SUHAKAM-மில் கூட இந்தியர்களின் நியமனம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

துரதிஷ்டவசமாக, நமது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து போதிய அளவுக்கு பேசுவதுமில்லை.

மலேசிய இந்தியச் சமூகத்திடம் இல்லாத திறமைகளா அல்லது நிபுணத்துவமா?

துறை சார் நிபுணர்கள், கல்விமான்கள், பொருளாதார வல்லுநர்கள், அர்ப்பணிப்பு உணர்வுமிக்க அரசியல்வாதிகள், அடிமட்ட தலைவர்கள், ஓய்வுப் பெற்ற மூத்த அரசு அதிகாரிகள், ஓய்வுப் பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் என நம்மிடம் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன.

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில், முக்கியப் பொறுப்புகளில் தகுதி வாய்ந்த நம்மவர்களும் நியமிக்கப்படுவது, சமூகத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்கே நன்மையைக் கொண்டு வரும்.

எனவே, தேச நிர்மாணிப்பில் ஆக்ககரமாக பங்களிக்க இந்தியர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கிட ஆவண செய்வீர்கள் என எதிர்பார்ப்பதாக, ‘மலேசியக் குடிமகன்’ எனக் குறிப்பிட்டு எம்.வெற்றிவேலன் எனும் சமூக ஆர்வலர் facebook பதிவில் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!