
கோலாலம்பூர், மே 26- டுவிட்டர் பதிவுகளின் மூலம் அரச அமைப்புக்கு சிறுமைத்தனம் மற்றும் இன துவேசத்தை ஏற்படுத்த முயன்றதன் தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவனை போலீசார் கைது செய்தனர். சிரம்பான் போலீசார் அநத நபரை கைது செய்திருப்பதாக கூட்டரசு போலீஸ் செயலாளர் Noorsiah Saadudin தெரிவித்ததார். 1948 ஆம் ஆண்டின் நிந்தனை சட்டத்தின் 4ஆவது உட்பிரிவு 1 இன் கீழ் மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டத்தை தவறாக பயன்படுத்துவதன் தொடர்பில் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். நேற்று முதல் மூன்று நாட்களுக்கு அந்த நபர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக Noorsiah கூறினார்.