Latestமலேசியா

அரச மலேசிய கடற்படையின் ஹெலிகாப்டர் ஓட்டுனர் Wan Rezaudeen உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

கோம்பாக், ஏப் 25 – அரச மலேசிய கடற்படையின் ஹெலிகாப்டர் ஓட்டுனர் Wan Rezaudeen Kamal Abidin உடல் முழு அரச மரியாதையுடன் நேற்றிரவு மணி 9.50 அளவில் கோம்பாக்கிலுள்ள Raudhatul Sakinah முஸ்லிம் மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது. Salahuddin Al Ayyubi பள்ளிவாசலில் பொதுமக்கள் மற்றும் அரச மலேசிய கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்ட தொழுகைக்குப் பின் அவரது உடல் மையத்து கொல்லைக்கு கொண்டு வரப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் , அரச மலேசிய கடற்படையின் அதிகாரிகள் மற்றும் Wan Rezaudeen னுக்கு அறிமுகமானவர்கள் உட்பட கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இதற்கு முன்னதாக ஈப்போ அரச மலாய் 23 ஆவது ரெஜிமன் படையைச் சேர்ந்த எட்டு முஸ்லிம்களின் உடல்கள் இறுதி மரியாதைக்குப் பின் அடக்கம் செய்வதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று லுமுட்டிலுள்ள அரச மலேசிய கடற்படை பயிற்சித் தளத்தை சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதிக்கொண்ட பின் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். கடற்படையின் 90 ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்காக நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்டபோது அந்த ஹெலிகாப்டர்கள் விபத்திற்குள்ளாகின. இதனிடையே அந்த விபத்தில் உயிரிழந்த Leftenan T. Sivasuthan உடல் சித்தியவான் Taman Serdang Jaya விலுள்ள அவரது வீட்டிற்கு நேற்று மாலை மணி 5.52 அளவில் கொண்டுச் செல்லப்பட்டது. அவரது இறுதி சடங்கு பேரா மஞ்சோங்கில் உள்ள இந்து சபா மயானத்தில் இன்று நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!