துபாய், பிப் 23 – துபாய்க்குள் நுழைவதற்காக அரபு பெண்களைப்போல் வேடமிட்டுச் சென்ற மூன்று ஆப்பிரிக்க ஆடவர்களை நைஜீரிய அதிகாரிகள் கைது செய்தனர்.
முகத்திற்கு மேல் அரபு பெண்களைப் போல் வசீகர தோற்றமளிக்கும் வகையில் அவர்கள் அலங்காரம் செய்திருந்தனர். வாய்வரை அவர்கள் Purdah வை அணிந்திருந்தனர். எனினும் அவர்களில் ஒருவர் Purdah வை சரியாக அணிந்திருக்காததைத் தொடர்ந்து பிடிபட்டார்.
இதனையடுத்து, அந்த ஆடவர்கள் சம்பந்தப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அந்த மூவரின் நடவடிக்கை அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக சில வலைத்தளவாசிகள் கருத்துரைத்த வேளையில் இன்னும் சிலர் அவர்களது முக அலங்காரத்தை பாராட்டினர்.