
கோலாலம்பூர், செப் 12 – அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்க உதவித் தொகைகள் தேவையில்லையென பிரபல வர்த்தகரான அமீர் அலி மைடின் தெரிவித்திருக்கிறார். 10கிலோ பை கொண்ட உள்நாட்டு அரிசி 26 ரிங்கிட்டிற்கு விற்கப்படுவது SST மீதான விலை கட்டுப்பாடு செயல்முறை திட்டத்தை மலேசியா ஏற்கனவே கொண்டிருப்பதாக மைடின் சில்லறை வர்ததக நிலையத்தின் நிர்வாக இயக்குனருமான அமீர் கூறினார். எனவே அரசாங்கம் உதவிக்காக மேலும் பெரிய அளவில் பணத்தை செலவிட வேண்டியதில்லையென அவர் வலியுறுத்தினார்.
இப்போதை விவகாரம் உள்நாட்டு அரிசியின் விலை அல்ல. அனைத்து பேராங்காடிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகைக் கடைகளில் போதுமான அரிசி விநியோகம் கிடைக்கவில்லை என அமீர் சுட்டிக்காட்டினார்.
அரிசி உற்பத்தியின் ஆற்றலையும் அதற்கான ஆதாயத்தையும பெறும் பொருட்டு உள்நாட்டு உரிசி உற்பத்தியாளர்களின் உத்தியை அதிகாரிப்பதற்காக நடவடிக்கைளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அரிசி விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவித் தொகைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென பூமிபுத்ரா அரிசி விநியோகிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர இஸ்மாயில் அவாங் ஆலோசனை தெரிவித்திருந்தது குறித்து அமீர் கருத்துரைத்தபோது இதனைத் தெரிவித்தார்.