
இந்தியா, ஜூலை 21 – பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை நிறுத்த இந்தியா உத்தவிட்டிருப்பது, உலக உணவுச் சந்தைகளில் பணவீக்கம் பற்றிய அச்சத்தை தூண்டியுள்ளது.
“உள்நாட்டில் சில்லறை அரிசி விலை
3 விழுக்காடு உயர்ந்ததாலும், பருவமழை பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாலும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று இந்திய அரசாங்கம் கூறியது.
“மற்ற நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் வழங்கும் உத்தரவு அடிப்படையில் குறிப்பிட்ட அரிசியின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும்” என்றும் இந்திய உணவு அமைச்சகம் அறிவித்தது.
உலக அரிசி ஏற்றுமதியில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ள நிலையில் அரிசி ஏற்றுமதி மீதான தடை ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் தாய்லாந்து மற்றும் வியட்நாமில் பற்றாக்குறையை சமாளிக்க போதுமான சரக்குகள் இல்லை என்பதால், உலகளாவிய உணவு விலை ஏற்றத்திற்கு இது மேலும் வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடக்கும் நிலையில், உணவுப் பணவீக்கம் குறித்த பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் உணர்திறனை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2022ல் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்திய பின்னர், கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீடித்தது.
கரும்பு விளைச்சல் குறைந்ததால் இந்தாண்டு சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது குறிப்பிடத்தக்கது.