Latestஉலகம்

அரியணையின் அடுத்த வாரிசு யார்? இதோ பட்டியல்

லண்டன், மே 10 – கடந்த வாரம்தான் லண்டனின் மூன்றாம் மன்னராக தனது 74 வயதில் முடி சூடிக் கொண்டுள்ளார் மன்னர் சார்ல்ஸ். இந்நிலையில், மன்னர் சார்ல்ஸிற்குப் பிறகு அரியணையில் யார் அமர்வார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கான பதில் இதோ.

மன்னர் சார்ல்ஸிற்குப் பிறகு முடி சூடிக் கொள்ள தகுதி பெறுகிறார் சார்ல்ஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவிம் மூத்த மகனான இளவரசர் வில்லியம்.

அவருக்கு அடுத்து அவரது வாரிசான இளவரசர் ஜோர்ஜ் அரியணையில் அமர்வார். அவருக்கு தற்போது வயது 9ஆகும். அவரைத் தொடர்ந்து, தற்போது 8 வயதாகும் வில்லியம் கேத்தரினின் மகள் இளவரசி சார்லோத்தும், நான்காவது இடத்தில் இவர்களின் இளைய மகன் இளவரசர் லூயிஸும் பட்டியலில் இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி அரியணை ஏறும் வாய்ப்பில் 5வது இடத்தில் இருக்கின்றார். அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மன்னராகும் தகுதி அவருக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு வேளை மன்னர் சார்ல்ஸின் மறைவிற்குப் பிறகு ராணி கெமிலியா தொடர்ந்து ராணியாக இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் அவருக்கு அரியணையை ஆட்சி செய்யும் அதிகாரம் வராது என கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!