
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27 – இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம், ஜூலை 1-ஆம் திகதி திரையரங்குகளை நாடவிருக்கின்றது.
அத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக மலேசியா வந்திருந்த நடிகர் அருண் விஜய், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 2.00 அளவில், தலைநகர் ஹில்டன் ஹோட்டலில் ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.
யானை திரைப்படம் குடும்பச் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும் அத்திரைப்படத்திற்கு மலேசிய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்குமென தாம் நம்புவதாக அவர் அந்த சந்திப்பின்போது கூறினார்.
யானை திரைப்படத்தில் அருண் விஜய்-யுடன் பிரியா பவாணி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சமுத்திரகணி ஆகியோரும் நடித்துள்ளனர். அப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.