கிள்ளான், பிப் 28- கிள்ளான், Sungai Udangங்கிலுள்ள தனது வீட்டில் உள்ள சலவை இயந்திரத்திற்குள் சிக்கித் தவித்த சிறுவன் ஒருவன் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.
முன்னதாக, 1.52 மணியளவில், hyperactive எனப்படும் அதீத சுறுசுறுப்பு குறைப்பாடு கொண்ட அந்தச் சிறுவன், சலவை இயந்திரத்திற்குள் பாதி உடல் சிக்கிக் கொண்ட நிலையில் இருப்பதாக அவனுடைய பெற்றோர் தங்களைத் தொடர்பு கொண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவுத் தலைவர் Norazam Khamis தெரிவித்தார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனை எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.