
லண்டன், மே 15 – இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் நேற்று Brighton குழுவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 3 – 0 என்ற கோல் கணக்கில் Arsenal தோல்வி கண்டது குறித்து அதன் நிர்வாகி Mikel Arteta தமது மன்னிப்பை கேட்டுக்கொண்டார். பிற்பகுதி ஆட்டத்தில் அடுத்தடுத்து வாங்கிய இந்த கோல்களினால் Arsenal தோல்வி கண்டதைத் தொடர்ந்து பிரிமிர் லீக் விருதை பெறும் முயசி பறிபோனது . இதனால் தற்போது லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் Manchester City பிரிமியர் லீக் பட்டத்தை பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டது.