
பெவ்னஸ் அயர்ஸ் , ஜன 21 – தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை மணி 3.39 – க்கு ரெக்டர் கருவியில் 6. 5 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கார்போடா பகுதியில் சில நிமிடங்கள் நீடித்த நிலநடுக்கத்தின்போது சில கட்டிடங்களிலும் அதிர்வு ஏற்பட்டன. இதனால் அச்சமடைந்த மக்கள் சலைகளுக்கு தப்பியோடினர். நிலநடுக்கம் தொடர்பான பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.