வாஷிங்டன், செப்டம்பர்-6, அமெரிக்காவில் கடந்த மாதம் மரணமடைந்த 70 வயது முதியவரின் குடும்பம், மருத்துவர்களின் கவனக்குறைவே அதற்குக் காரணமெனக் கூறி வழக்குத் தொடுத்துள்ளது.
ஃபுளோரிடா மாநிலத்தில் அறுவை சிகிச்சையின் போது தவறான உடலுறுப்பை நீக்கி விட்டதே 70 வயது William Bryan-னின் மரணத்திற்குக் காரணமெனக் கூறி மனைவி Beverly வழக்குப் பதிவுச் செய்துள்ளார்
திடீரென இடது பக்க இடுப்பில் தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்; இல்லையேன்றால் உயிருக்கே ஆபத்தாகி விடுமென்றும், மருத்துவர்கள் எச்சரித்தனர்.
Bryan-னின் மண்ணீரல் வழக்கத்தை விட 4 மடங்கு அதிக சேதாரத்தை கொண்டிருப்பதாகவும், உடலின் மற்ற பாகங்களுக்கும் நோய்க் கிருமி பரவும் ஆபத்திருப்பதாகவும் மனைவியிடம் தெரிவிக்கப்பட்டது.
முதலில் தயங்கிய அந்த வயோதிகத் தம்பதி பின்னர் ஒப்புக் கொண்டனர்.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.
ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு Bryan துரதிஷ்டவசமாக இறந்து விட்டார்.
இறந்த பிறகே, அவரின் உடலிலிருந்து உண்மையில் நீக்கப்பட்டது கல்லீரல்; மண்ணீரல் அல்ல என அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இந்நிலையில், இறந்து போன கணவருக்கு நீதி கிடைக்க வேண்டி மனைவி வழக்குத் தொடுத்துள்ளார்.
தவறு செய்த மருத்துவர் இனி மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக் கூடாது என Beverly வழக்கு மனுவில் கூறியுள்ளார்.