Latestமலேசியா

அலோர் காஜாவில் 2 மணி நேரம் காட்டில் தொலைந்த மனநல நோயாளி – பாதுகாப்பாக மீட்பு

அலோர் காஜா, ஆகஸ்ட் 30 – அலோர் காஜா, தாமான் பெலிம்பிங் ஹார்மோனியில் (Taman Belimbing Harmoni) தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 2 மணிநேரம் மனநல நோயாளி ஒருவர் தொலைந்த போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது சகோதரருடன் ஏற்பட்ட விவாதத்தில், அவர் திட்டியதால், பாதிக்கப்பட்ட 20 வயது ஆடவன் காட்டிற்குள் ஓடியதாகக் கூறப்படுகிறது.

அரை மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அந்த காட்டிலிருந்து, பயந்த நிலையில், காயம் ஏதுவுமின்றி கண்டுபிடிக்கப்பட்டதாக அலோர் காஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு ஆணையர் மற்றும் உதவி தீயணைப்பு தலைவர் முகமட் ஹமிசான் முகமட் ஹூசின் (Mohamad Hamizan Mohd Husin) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!