அலோர் காஜா, ஆகஸ்ட் 6 – அலோர் காஜா, Masjid Tanah தொழில்துறை பகுதியில் ஐஸ் கட்டிகளை உருவாக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனிய வாயு கசிவில் காவலாளி உட்பட ஐந்து வெளிநாட்டுப் பணியாளர்கள் உயிர் தப்பினர்.
அந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள வாகனம் பழுது பார்க்கும் பட்டறையில் இருந்த தொழிலாளி கொடுத்த தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்டுப் படையினர் அவ்விடத்திற்கு விரைந்தனர்.
அதே வேளையில், அங்கு பணியில் ஈடுபட்ட அபாயகரமான இரசாயன சிறப்புக் குழு, ஆய்வுக்குப் பிறகு, அந்த வாயு 2,793 லிட்டர் அதாவது 1428 கிலோ கிராம் கொள்ளளவு கொண்ட விஷம் மற்றும் அரிக்கும் தன்மை கொண்ட, ammonia anhydrous என்பதை உறுதிப்படுத்தினர்.
தொட்டியிலிருந்து குளிரூட்டி இயந்திரத்திற்குச் செல்லும் ஒரு குழாயில் ஏற்பட்ட ஓட்டையால் கசிவு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே, அபாயகரமான அம்மோனியா ரீடிங் அந்த தொழிற்சாலை உள்ளே கண்டறியப்பட்டதால் இரசாயன சிறப்புக் குழுவினர் இரு குழாய்களின் வால்வை மூடிவிட்டு, பொருட்களை மற்றொரு இடத்திற்கு மாற்றி வைத்துள்ளனர்.