
கெடா, அலோர் ஸ்டாரில், நபர் ஒருவரை ஐவர் தூக்கி சென்று காரில் போட்டு கடத்திச் செல்லும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அதனை ஒரு கடத்தல் சம்பவமாக வகைப்படுத்தியுள்ள போலீஸ், சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளதாக, கோத்தா ஸ்டார் போலீஸ் OCPD அசிஸ்டன் கமிஸ்னர் அஹ்மட் சுக்ரி மாட் ஆக்கேர் தெரிவித்தார்.
அந்த காணொளியை சம்பவ இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் இருந்து பதிவுச் செய்த நபர், கடத்தப்பட்ட ஆடவரை விடுவிக்க கூறி கூச்சலிடும் சத்தமும் அதில் பதிவாகியுள்ளது.
எனினும், அதனை சற்றும் பொருட்படுதாத கடத்தல்காரர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அச்சம்பவம் தொடர்பில், கடத்தப்பட்ட நபரின் பெற்றோர்களுக்கு தொலைப்பேசி அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் போலீஸ் புகார் செய்துள்ளனர்.
இதுவரை அந்த கடத்தல் தொடர்பில் 46 வயது ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை ; அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையில் எஞ்சிய பெண் ஒருவர் உட்பட நால்வரை தேடும் பணிகளை போலீஸ் துரிதப்படுத்தியுள்ளது.