அலோர் ஸ்டார், அக்டோபர் 3 – அலோர் ஸ்டாரில், வாகனம் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 25 வயது இளைஞர் ஒருவர் பலியானர்.
இன்று காலை, அந்த இளைஞர் ஓட்டி வந்த புரோட்டான் வீரா (Proton Wira) கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, Santap ஆற்றில், விழுந்தது.
தகவலறிந்து விரைந்த கெடா மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பாதுகாப்பாக இளைஞரை மீட்ட நிலையிலும், அவர் உயிரிழந்தார் என்பதை சுகாதார பணியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இவ்வேளையில் அவரின் வாகனமும் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.