
கோலாலம்பூர், மார்ச் 23 – Albukhary அறநிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு அகற்றப்பட்டதாக கூறப்படுவதை நிதியமைச்சு மறுத்துள்ளது.
நிதியமைச்சு அல்லது இதற்கு முந்தைய நிதியமைச்சர் மூலாமாகவோ மற்றும் அமைச்சின் அதிகாரிகள் வரும் Albukhary அறநிறுவனத்திற்கான வரி விலக்கு எதனையும் ரத்துச்செய்யவில்லை என இன்று வெளியிட்ட அறிக்கையில் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த அறநிறுவனத்திற்கான வரி விலக்கை ரத்துச் செய்வதற்கு முன்னள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கையெழுத்திட்டிருந்ததாக சமூக வலைத்தளத்தில் வைரலான தகவலை மறுத்து அமைச்சு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த பொய்யான குற்றச்சாட்டை அமைச்சு கடுமையாக கருதுவதாகவும் இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை நிதிமுயமைச்சராக இருந்த லிம் குவான் எங் Albukhary அறநிறுவனத்தின் வரி விலக்கை ரத்துத் செய்துள்ளார் என இதற்கு முன் முன்னாள் பிரதமரான முஹிடின் யாசின் கூறியிருந்தார்.