
கிள்ளான், ஆக 22 – அளவுக்கு அதிகாமான அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர் அல்லது அதனை தவிர்க்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் Sharafuddin Idris Shah கேட்டுக்கொண்டார் . உண்மையில் அளவுக்கு அதிகமான அரசியல் நடவடிக்கைகளினால் சிலாங்கூரில் தாமும் மக்களும் களைத்துவிட்டோம் என்பதை குறிப்பிட விரும்புவதாக நேற்று சிலாங்கூர் மந்திரிபுசார் மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கு பதவிப் பெறுமானம் செய்து வைக்கும் சடங்கில் உரையாற்றியபோது சுல்தான் Sharafuddin தெரிவித்தார். மக்கள் மட்டும் அல்ல. நானும் களைத்துவிடேன். மக்கைளை முன்னுரிமை செலுத்தி அரசியலை ஒதுக்கி வையுங்கள் என அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் எதிர்காலம் , நமது மக்கள் மற்றும் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிந்திக்க வேண்டும் என சிலங்கூர் சுல்தான் நினைவுறுத்தினார். சிலாங்கூருக்கு மீண்டும் பொற்கலத்தை கொண்டுவருதற்கு தேர்ந்தெடுக்கப்பட் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக உழைக்க வேண்டும் . மேம்பாட்டின் அனைத்து துறைகளிலும் சிலாங்கூர் முன்னேற்றம் காண தாம் விரும்புவதாக Sultan Sharafuddin வலியுறுத்தினார்.