
சிலாங்கூரில், அழகு சாதனப் பொருட்களையும், ஆடைகளையும் திருடி வந்த கும்பலை சேர்ந்த ஐவர் பிடிப்பட்டதை அடுத்து, அக்கும்பலின் நடவடிக்கைகள் அம்பலமானது. இம்மாதம் இரண்டாம் தேதி, நள்ளிரவு மணி 12 வாக்கில், ஜாலான் USJ 25/1A-யிலுள்ள பேரங்காடியில்ல, அழகு சாதன கடையில் வைக்கப்பட்டிருந்த நான்காயிரத்து 667 ரிங்கிட் பெருமானமுள்ள 24 அழகு சாதன பொருட்களை காணவில்லை என அங்கு பணிப்புரியும் விற்பனை முகவர் ஒருவர் புகார் செய்தார்.
அதனை அடுத்து, CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவை ஆராய்ந்த போது, டிசம்பர் முதலாம் தேதி, மாலை மணி 3.30 வாக்கில், நான்கு பெண்கள் சம்பந்தப்பட்ட அழகு சாதனங்களை திருடிச் சென்றது தெரிய வந்ததாக, சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார். அச்சம்பவம் தொடர்பில், கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பெண் ஒருவரும், தலைநகர், ஜாலான் பீல்லில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஆடவன் ஒருவனும், மூன்று பெண்களும் கைதாகினர்.
கைது செய்யப்பட்ட அனைவரும், கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, செப்பாங், ஷா ஆலாம் ஆகிய பகுதிகளில், திருடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.