சிரம்பான், ஆகஸ்ட்-28 – பாதுகாக்கப்பட்ட மற்றும் அழிந்து வரும் ஆமையினத்தைச் சேர்ந்த 9 ஆமைகளை வைத்திருந்த 4 குற்றங்களுக்காக, சிரம்பானில் கணவன் மனைவிக்கு தலா 24,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தனித்தனியாக சிறைத்தண்டனை விதிக்கப்படுமென நீதிபதி அறிவித்தார்.
அனைத்து 4 குற்றங்களையும் 2022 நவம்பரில், சிரம்பான் 2, Green Street Homes குடியிருப்பில் உள்ள வீட்டில் இருவரும் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெட்டி ஆமை (box tortoise) ஆப்ரிக்க ஆமை (African Spurred Tortoise), செங்காது ஆமை (red ear tortoise) உள்ளிட்ட ஆமையினங்களை வீட்டில் வைத்திருக்கின்றனர்.
வழக்கை, PERHILITAN எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையின் சட்ட அதிகாரி நடத்தினார்.