கன்பெரா, பிப் 11 – கோலா விலங்கினை அழிந்து வரும் பட்டியலில் சேர்த்திருக்கின்றது ஆஸ்திரேலியா.
அந்த விலங்கினத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் 2050-க்குள் கோலாக்கள் இப்பூமியிலிருந்து அழிந்து விடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் 2019/ 2020 –இல் நிகழ்ந்த காட்டுத் தீயில் , 5,000 கோலாக்கள் உயிரிழந்ததோடு, அதன் 24 விழுக்காடு உறைவிடப் பகுதி அழிந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.