
பெட்டாலிங் ஜெயா, மே 18 – சமீபத்தில் டிக்டோக் மூலமாக பிரபலமானவர் அக்கா கடை நாசி லெமாக் சங்கீதா. ஆனால் அவர் பிரபலமானதிலிருந்து அவருக்கு தொடர்ந்து பிரச்சனைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பலர் இருக்கும் நிலையில், சிலர் பொறாமை கொண்டு அவரை பற்றி பல்வேறான அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். அவர் இன்னும் சிரம்மான நிலையில் வாழ்ந்தாலும் அவர் என்னமோ மிக சொகுசாக வாழ்வது போலும் அவருக்கு எந்த உதவியும் தேவையில்லை போன்றும் சிலர் கூறுவது அவருக்கு மன உளைச்சளை ஏற்பத்தியுள்ளது.
அப்படி தினம் தினம் ஒரு சிலரால் தாம் எதிர்நோக்கும் சவால்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கண்ணீர் மல்க காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் சங்கீதா.
Insert video
Closing
நம் சமூகத்தில் யாராவது சுயமாக உழைத்து முன்னேறும் போது அவர்களுக்கு கைகொடுத்து ஆதரவு தர முடியாவிட்டாலும் சிறுமை கொண்டு அவர்கள் துவண்டு போகும் வகையில் அவதூறுகளைப் பரப்பாமல் இருப்பது நல்லது. நம் சமூகத்தைச் சேர்ந்த சங்கீதா தன் உழைப்பால் முன்னேறுவதைப் பார்த்து பெருமை கொள்வோம்.