Latestமலேசியா

அவசரநிலை பிரகடனம் குறித்து பேரரசருக்கு அமைச்சரவை ஆலோசனை தெரிவிக்கும்

கோலாம்பூர். ஜூன் 12- அவரசரநிலை பிரகடனத்தை ஆகஸ்டு 1 ஆம் தேதிக்குப் பிறகும் தொடர்வதா அல்லது முடிவுக்கு கொண்டு வருவதா என்பது குறித்து பேரரசருக்கு அரசாங்கம் ஆலோசனையை தெரிவிக்கும் என சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் தகியுடின் ஹசான் தெரிவித்தார்.

அவசரநிலையை நீட்டிப்பதா என்பதை முடிவு செய்வதில் பேரரசரின் விவேகத்திற்குட்பட்ட முடிவுக்கு அமைச்சரவை விட்டுவிடும் என அவர் கூறினார்.

கோவிட் தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் எங்களது முயற்சியில் ஒரு பகுதியாகவே இவ்வாண்டு தொடக்கத்தில் அமைச்சரவையின் ஆலோசனையை பொறுத்தே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தகியுடின் தெரிவித்தார்.

அவசரநிலை நீட்டிக்கப்படாவிட்டால் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு சரவா சட்டமன்ற தேர்தலும் சில இடைத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹாசிம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையையும் தகியுடின் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!