
கோலாலம்பூர், ஜன 25 – பத்துமலை தைப்பூசத்திற்கான ஏற்பாடுகளை கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானம் மும்முரமாக செய்து வரும் இவ்வேளையில் தேவஸ்தானத்திற்கு எதிராக பொய்யான அவதூறுகளை பரப்பிய ரவிந்திர குருக்கள் என்ற நபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான பொய்யான தவல்களை காணொளி வாயிலாக வெளியிட்டுள்ள அந்த குருக்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.
தெரிந்து பேசவேண்டும், தெளிவாக பேசவேண்டும், ஆனால் பொய் பேசுவது ஒரு குருக்களுக்கு அழகில்லை. பால் குடம் எடுத்து வந்தால் 5 ரிங்கிட்டும் , காவடிக்கு 10 ரிங்கிட்டும் விதிக்கப்படுகிறது . இது தவிர வேறு பணம் எதுவும் தேவஸ்தானம் வசூலிப்பதில்லை என்று நடராஜா தெரிவித்தார்.