Latestஇந்தியா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் 75 பேர் காயம்; இளைஞர் உயிரிழப்பு

அவனியாபுரம், ஜன 15 – பிரபல மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, இவ்வாண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் நடைபெற்ற வேளை , காளை முட்டி 75 பேர் காயமடைந்தனர்.

மாடுபிடி வீரர்கள் 26 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும், பார்வையாளர்கள் 11 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக 17 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பார்வையாளரான 18 வயது இளைஞனை காளை ஒன்று, இடது பக்க மார்பில் குத்தியதில் , அந்த இளைஞன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!