
ஷா அலாம், மே 18 – மாநில பெரிக்காத்தான் நேசனல் தலைவர் அஸ்மின் அலிக்கு எதிராக எங்கு தாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் போட்டியிடுவதற்கு தயாராய் இருப்பதாக சிலாங்கூர் மந்திரிபெசார் Amirudin Shari தெரிவித்துள்ளார். கடந்த 15ஆவது பொதுத் தேர்தலின்போது கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அஸ்மின் அலியை கிட்டத்தட்ட 13,000 வாக்குகள் பெரும்பான்மையில் Amirudin தோற்கடித்தார். சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினராக தற்போது Amirudin Shari இருந்து வருகிறார். தமது தொகுதியில் அஸ்மின் போட்டியிட முன்வந்தாலும் அதைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லையென அவர் கூறினார். Bukit Antarabangsa சட்டமன்ற தொகுதியில் Azmin போட்டியிடுவாரா அல்லது அங்கிருந்து சுங்கை துவா சட்டமன்ற தொகுதிக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது. அவருக்கு எதிரான நான் நிறுத்தப்பட்டால் அவரை சந்திப்பதற்கு தயாராய் இருக்கிறேன் என Amirudin தெரிவித்தார்.