
கோலாலம்பூர், மார்ச் 13 – தேர்தல் செலவிற்கு பணம் இல்லாவிட்டாலும் Mohamad Azmin Ali மற்றும் Radzi Jidin ஆகியோர் தலைமையில் பெரிக்காத்தான் நேசனல் சிலாங்கூரை கைப்பற்றும் என பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்திருக்கிறார்.
சிலாங்கூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு Azmin – Radzi தலைமையேற்பார்கள் என அவர் கூறினார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு எங்களுக்கு சில திட்டம் இருக்கிறது. அதனை இப்போது நாங்கள் வெளியிட்மாட்டோம் என முஹிடின் கூறினார். சிலாங்கூரை நாங்கள் கைப்பற்றுவோம் . அதேவேளையில் பினாங்கில் பக்கத்தான் ஹராப்பான் பெரும்பான்மையை நாங்கள் குறைப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.