Latestஉலகம்

அஸ்ஸாமில் யானை தாக்கி குழந்தை உட்பட மூவர் மரணம்

கௌஹாத்தி , ஆக 16 – இந்தியாவில் அஸாம் மாநிலத்தில் காட்டு யானைகள் கிராமபுறப் பகுதிகளில் புகுந்து அடிக்கடி விவசாய உற்பத்திக்கு சேதம் விளைவிப்பதோடு பொதுமக்களையும் தாக்கி வரும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்து வருகின்றன. ஆகக்கடைசியாக நேற்று விடியற்காலையில் அஸாமில் , மெகலாயா எல்லைப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் புகுந்த காட்டு யானை தாக்கியதில் ஒரு குழந்தை உட்பட மூவர் மாண்டதை வனத்துறை அதிகாரி துர்பா டுட்டா உறுதிப்படுத்தினார். கடந்த மாதமும் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் மாண்டார். இதற்கு முன் மே மாதம் அஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் மாண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!