
சென்னை, மார்ச் 14 – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அ.தி.மு.க தமது தலைமையின் கீழ் வந்துவிட்டதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகளில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வரும் இவ்வேளையில் அவரது பரம எதிரியான ஓ . பன்னீர்செல்வம் முக்கிய நகர்களில் கூட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த வேளையில் கட்சியின் பொதுச் செயலாளராக வருவதற்கான முன்னேற்பாட்டு நடவடிகையாக அடுத்தா மாத இறுதிக்குள் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி மும்மூரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். எந்தவொரு பிரச்சனையும் இன்றி பொதுக் குழு கூட்டத்தை கூட்டி பொதுச் செயலாளராக ஆகிவிட்டால் அதிமுக தமது முழுக்கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.