
கோலாலம்பூர், அக்டோபர் 3 – MAHB -மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கடந்த ஆகஸ்ட்டில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக, மலேசியா மற்றும் துருக்கியிலுள்ள அதன் விமான நிலையங்களில், ஒரு கோடியே பத்து லட்சத்துக்கும் அதிகமான பயணிகளின் நடமாட்டத்தை பதிவுச் செய்துள்ளது.
அந்த எண்ணிக்கையில், 66 விழுக்காடு அல்லது 74 லட்சம் பேர் மலேசிய விமான நிலையங்களில் பதிவுச் செய்யப்பட்ட பயணிகள் ஆவர்.
துருக்கியேவில், கடந்த ஜூலை மாதம் மட்டும், பயனர்களின் நடமாட்டம் மூன்று விழுக்காடு அதிகரித்து 38 லட்சமாக பதிவுச் செய்யப்பட்டது.
இதனிடையே, உள்ளூர் நிலையில், மலேசியாவிலுள்ள, விமான நிலையங்கள், இவ்வாண்டு ஆகஸ்ட்டில் 35 உள்நாட்டு பயணிகள் மற்றும் 39 லட்சம் வெளிநாட்டு பயணிகளின் வருகையை பதிவுச் செய்துள்ளன.
ஆகஸ்ட்டு 12-ஆம் தேதி நடைபெற்ற, ஆறு மாநிலங்களுக்கான சட்ட மன்ற தேர்தல்கள், அதனை தொடர்ந்து ஆகஸ்ட்டு 13-ஆம் தேதி வழங்கப்பட்ட பொது விடுமுறை ஆகிய காரணங்களால் ஆகஸ்ட்டில் பயணிகளின் நடமாட்டம் அதிகளவில் பதிவுச் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.