கோலாலம்பூர், செப்டம்பர் 2 – உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் முதன்மை இலக்கவியல் தமிழ்ச் செய்தி நிறுவனமான வணக்கம் மலேசியா, மாதத்திற்கு 70 முதல் 80 மில்லியன் பார்வைகளுடன் வலம் வந்து கொண்டிருந்தது.
தற்போது அதன் மகத்தான மைல்கல்லாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தனது டிக் டோக்கில் 129 மில்லியன் views எனும் பார்வைகளை எட்டி, மீண்டும், மலேசியாவின் முதன்மையான மற்றும் பிரதான தமிழ் செய்தி ஊடகமாக அதன் நிலையை நிலை நிறுத்தியுள்ளது.
இந்த சாதனைக்கு வித்திட்ட பார்வையாளர்களின் பேரன்புக்கு, வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த நன்றிகள்.
முகநூல், Instagram, Tiktok, Youtube, Whatsapp, Telegram என எங்கும் பரவி சேவைகளை வழங்கி வரும் வணக்கம் மலேசிய, இன்னும் தொடர்ந்து பயனுள்ள, நம்பக்கத்தன்மையான தரமான செய்திகளை வழங்க வேண்டும் என்ற கடப்பாட்டோடு தொடர்ந்து செயல்படுவோம் என உறுதியளிக்கிறது.
எங்கும் எப்போது வணக்கம் மலேசியா!