Latestமலேசியா

ஆகஸ்ட் 1 ஆம்தேதிக்கு பிறகு அவசரநிலை நீட்டிக்கப்படக்கூடாது- ஸாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், ஜூன் 11- ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு அவசர நிலை நீட்டிக்கப்படக்கூடாது என்பதோடு நாடாளுமன்ற கூட்டம் மீண்டும் கூடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற அம்னோவின் நிலைப்பாடு குறித்து பேரரசருக்கு தெளிவாக விளக்கம் அளித்துவிட்டதாக ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அவசரநிலைக்கு முன்பாக தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

எனினும் இன்று காலை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லாவுடன் சுமார் ஒரு மணி நேரம் தாம் நடத்திய சந்திப்பின்போது தேசிய நடவடிக்கை மன்றம் குறித்து விவகாரம் எதுவும் எழவில்லை என இஸ்தானா நெகாரா நுழைவாயிலில் குழுமியிருந்த செய்தியாளர்களிடம் பேசியபோது ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அவசரநிலை பிரகடனம் போதுமானதாகும்.

ஆனால் அவசரநிலை பிரகடனம் தனது உண்மையான நோக்கத்திலிருந்து விலகி விட்டது என அவர் சுட்டிக்காட்டினார். நாங்கள் தேசிய நடவடிக்கை மன்றம் குறித்து விவாதிக்கவில்லை. நடப்பு நிலைமைக்கு அப்பாற்பட்டு இந்த விவகாரம் உள்ளது. அவசரநிலை போதுமானதாக இருந்தது. ஆனால் இதர நோக்கங்களுக்கு அவசர நிலை பயன்படுத்தப்பட்டதால் அது தனது உண்மையான நோக்கத்திலிருந்து விலகிவிட்டது.

எது எப்படியிருந்தபோதிலும் அவசர நிலையை நீட்டிக்க வேண்டாமென பேரரசருக்கு தாம் ஆலோசனை தெரிவித்ததாக அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

மக்களின் கவலைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பேரரசருடன் தமது கலந்துரையாடல் இருந்ததாகவும் அவர் சொன்னார். அவசரநிலையை பிரகடனப்படுத்தாமலேயே கோவிட் விவகாரத்தை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டிருக்க முடியும். அவசரநிலை நாட்டிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டதால் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு அது தொடரக்கூடாது என்ற அம்னோவின் நிலைப்பாட்டை பேரரசருக்கு தெரிவித்துவிட்டதாக அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!