
தாய்லாந்து மக்களால் மிகவும் அஞ்சப்படுகின்றன, ஒரு வகை ஆக்ரோஷமான ஊர்வன இனத்தை சேர்ந்த Gecko Lizard என அழைக்கப்படும் மரப்பல்லியுடன் மூன்று சிறுவர்கள் விளையாடும் காணொளி ஒன்று Tik Tok சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
அதே சமயம், உண்மையில் அது மரப்பல்லிதானா என சமூக ஊடக பயனர்களை அந்த காணொளி குழப்பமடையவும் செய்துள்ளது.
மரப்பல்லிகள் விஷம் அற்றவை. எனினும், அவை கடித்தால் இரத்தம் வரும் என்பதோடு, கடித்தவுடன் அவை தாடையை பூட்டிக் கொள்ளும் என்பதால் அந்த கடியிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது.
அதனால், அரிய வகை விலங்கினமானாலும், தாய்லாந்து மக்கள் மிகவும் அஞ்சுகின்ற விளங்கினமாகவும் மரபல்லி திகழ்கிறது.
அதனால், சிறுவர்கஅல் மரப்பல்லியை விளையாட்டு பொருளாக்கி விளையாடிக் கொண்டிருக்கும் அந்த காணொளி இதுவரை எட்டாயிரத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.