
பெட்டாலிங் ஜெயா, ஆக 19 – சிலாங்கூர் மந்திரி பெசாரின் பதவியேற்பு சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை, ஆகஸ்டு 21 என அறிவித்துள்ளது சிலாங்கூர் அரண்மனை.
இஸ்தானா அலாம் ஷாவில் காலை 11 மணிக்கு இப்பதவியேற்பு மற்றும் பதவி உறுதி மொழி சடங்கு நடைப்பெற சிலாங்கூர் சுல்தான் அனுமதி அளித்திருப்பதாக , அரண்மனையின் முகநூல் பதிவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பும் அதே நாளில் மதியம் 2 மணிக்கு நடைபெறும் எனவும் அரண்மனை கூறியுள்ளது.
ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அந்த 10 பேர் 32 பக்காதான் ஹராப்பான் மற்றும் 2 பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, மாநில ஆட்சிக்குழு பதவியில் இந்தியர் பிரதியாக DAPமற்றும் PKR ஆகிய இரண்டு கட்சியிலிருந்து , எந்த கட்சியின் உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
PKR கட்சியிலிருந்து குணராஜ் ஜோர்ச் மற்றும் DAP கட்சியிலிருந்து பாப்பாராய்டு வீரமன் ஆகியோரின் பெயர்கள் இந்தியர் பிரதிநிதியின் பெயருக்கு அடிபடுகின்றன.
இந்நிலையில், முன்பு அன்வார் கூறியிருந்தது போல, சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் ம.இ.கா மற்றும் ம.சீ.ச-வின் பங்களிப்பு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.