
ஷா ஆலாம், ஜன 3 – மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்வி ஆலோசனைக் குழு, ஆசிரியர்கள் எதிர்நோக்கியிருக்கும் அதிகப்படியான வேலைச் சுமை குறித்த பிரச்சனையைக் கவனிக்குமென, கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்திருக்கின்றார்.
நாட்டின் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் கருத்துகளையும் முன் வைப்பதற்காக தேசிய கல்வி ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படுவதாக கடந்த மாதம் அமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.