
கோலாலம்பூர், மார்ச் 23 – ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க, உதவி ஆசிரியர்களை நியமிக்கும் அவசியம் குறித்து கல்வியமைச்சு பரிசீலித்து வருகின்றது.
இவ்வேளையில், 2023 – 2024 புதிய பள்ளித் தவணையில், ஆசியர்களின் பணிச் சுமையைக் குறைக்க கல்வியமைச்சு ஏற்கனவே 7 நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, கல்வி துணையமைச்சர் Lim Hui Ying தெரிவித்தார்.
மாணவர்களின் கற்றலில் பெரிய தாக்கத்தினைக் கொண்டு வராத போட்டிகள், கொண்டாட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளை ரத்து செய்திருப்பது,
பொது தேர்வுகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக, ஆசிரியர்களைத் தவிர ஓய்வு பெற்றவர்கள் அல்லது உயர் கல்விக்கூட மாணவர்களை நியமிப்பது ஆகியவை அந்த நடவடிக்கைகளில் அடங்குமென அவர் கூறினார்.