பேங்கோக், ஆகஸ்ட் -23, Mpox நோயின் ஆபத்தான மாறுபாடு, ஆசியாவிலேயே முதன் முறையாக தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து கடந்த வாரம் பேங்கோக் வந்த ஐரோப்பியருக்கு, ஆபத்தான அந்த கிளேட் 1 (clade 1) மாறுபாடு கண்டிருப்பதை ஆய்வுக் கூட சோதனை உறுதிச் செய்தது.
66 வயது அந்நபர் தற்போது பேங்கோக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
mpox நோய் கிருமி உலகிற்கு புதியதல்ல என்றாலும், அதன் கிளேட் 1 மாறுபாடு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
அது, வேகமாகப் பரவக் கூடியதென்பதோடு, பெரும்பாலும் மரணத்தில் கொண்டு போய் விட்டு விடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கிளேட் 1 மிக மிக ஆபத்தானது என, உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது.
ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் சம்பவமாக, ஆகஸ்ட் 15-ல் சுவீடனில் இந்த கிளேட் 1 நோய் உறுதிச் செய்யப்பட்டது.
மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோவில் (Congo) இவ்வாண்டு மட்டும் 16,000 mpox சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் 500 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.