Latestமலேசியாவிளையாட்டு

ஆசிய உடல் கட்டழகி போட்டியில் சரவாவின் பிலோமினா வாகை சூடினார்; ஆண்கள் பிரிவில் மகேன் அப்துல்லாவுக்கு தங்கம்

கோலாலம்பூர், செப்க 19 – நேப்பாளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 55 ஆவது ஆசிய உடல் கட்டழகி போட்டியில் சரவாவின் Philomena Dexcyln Siar மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதோடு முதல் முறையாக ஆசிய உடல் கட்டழகி வெற்றியாளர் பட்டத்தையும் வென்றார்.
ஆண்களுக்கான 167 சென்டிமீட்டர் வரையிலான உடல் அமைப்பைக் கொண்ட பிரிவில் மலேசியாவின் Mohd Syarul Azman Mahen Abdullah தங்கம் வென்றார். இப்பிரிவில் மாலத்தீவுகளின் அப்துல்லா ஹசான் வெள்ளிப் பதக்கத்தையும் , இந்தியாவின் Amal Anil Kumar வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
ஆண்களுக்கான 175 சென்டிமீட்டர் வரையிலான உடல் அமைப்பு பிரிவில் மலேசியாவின் Ahmad Faiz தங்கம் வென்றார்.
இதனிடையே தேசிய ஒற்றுமைக்கு விளையாட்டு தவிர்க்கமுடியாத கருவியாக அமைவதாக 40 வயதுடைய Philomena தெரிவித்தார்.
ஆசிய உடல் கட்டழகி விருதை வென்ற சரவாக்கின் முதல் பெண் போட்டியாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் வியட்னாமின் Nguyen Thi Kim Chuong இரண்டாவது இடத்தையும், தாய்லாந்தின் Ajaree Tansub மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு மியன்மார் Yangonனில் நடைபெற்ற 16ஆவது தென்கிழக்காசிய உடல் கட்டழகி போட்டியில் Philomena வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என்பதோடு தற்போது சரவாக் மாநில அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!