கோலாலம்பூர், பிப் 3 – இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20 ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் ஆசியா குழு பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் வெற்றிக்கு தாம் கடுமையாக போராடப் போவதாக தேசிய ஒற்றையர் பேட்மிண்டன் வீராங்கனையான கிஷோனா செல்வதுரை தெரிவித்தார். அந்த போட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் முதல் நிலை குழுக்களை அனுப்பாவிட்டாலும் எதிரணியை நாம் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என 25 வயதுடைய கிஷோனா கூறினார்.
தகுதி அடிப்படையில் மலேசியா உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டிக்கு தகுதி பெறவேண்டும். ஆசிய குழு பேட்மிண்டன் போட்டியில் குறைந்த பட்சம் மலேசியா முதல் நான்கு இடங்களில் ஒன்றை பெறவேண்டும். என்னுடன் யார் மோதினாலும் அவர்களை வீழ்த்தி மலேசியாவிற்கு வெற்றிப் புள்ளியை தேடித் தரவேண்டும். அதற்கான கடுமையான உழைப்பதற்கு தயாராய் இருக்கிறேன் என 2019ஆம் ஆண்டு சீ போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவருமான கிஷோனா கூறினார்.