கோலாலம்பூர், டிசம்பர்-29 – கட்டாரில் நடைபெற்ற ஆசிய பொது சிலம்பப் போட்டியில், மலேசியா 12 தங்கப் பதக்கங்களை வென்று சாம்பியன் ஆனது.
ஆசிய அளவில் ஒட்டுமொத்த வெற்றியாளரானது புதிய வரலாறு என மலேசிய சிலம்பக் கழகத் தலைவர் Dr எம். சுரேஸ் வருணித்தார்.
6 தேசிய வீரர் – வீராங்கனைகள் அற்புதமாக விளையாடி ஆளுக்கு 2 தங்கப் பதக்கங்களைக் குவித்ததாக அவர் சொன்னார்.
அவர்கள் முறையே பிரகாஷ், ஷஸ்திவேனா, லீனா ஸ்ரீ, கவித்திரா, டர்னிஷா மற்றும் ரனிஷா ஆகியோர் ஆவர்.
தனித்திறமை மற்றும் பொருதல் பிரிவுகளில் அவர்கள் அப்பதக்கங்களை வென்றனர்.
அவர்கள் அறுவருமே, ஆகஸ்டில் சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டியிலும் பதக்கங்களை வென்றவர்கள் ஆவர்.
ஆசிய சிலம்பப் போட்டியில், உபசரணை நாடான கட்டார் இரண்டாமிடத்தையும், ஐக்கிய அரபு சிற்றரசு மூன்றாமிடத்தையும் பிடித்தன.
இந்திய, சவூதி அரேபியப் போட்டியாளர்களும் சவாலிலிருந்ததாக சுரேஸ் சொன்னார்.