Latestமலேசியா

ஆசிய சுற்றுலா -உபசரிப்பு துறையின் விருதளிப்பு ; 23 நாடுகள் பங்கேற்பு

கோலாலம்பூர், மார்ச் 19 – சுற்றுலா – உபசரிப்பு தொழில்துறையில் ஈடுபட்டுள்ள ஆசிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களைச் சிறப்பிக்கும் விருதளிப்பு விழா, அண்மையில் தலைநகரில் தங்கும் விடுதியொன்றில் நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளை உட்படுத்திய விருதுகளுக்கு 23 நாடுகளைச் சேர்ந்த 200 க்கும் அதிகமான நிறுவனங்கள் முன்மொழியப்பட்டன.

சுற்றுலா உபசரிப்பு துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விழாவில் , மலேசியா உட்பட தன்சானியா, பல்கேரியா, கம்போடியா, இந்தியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெற்றியாளர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

இந்த விருது விழாவினை, Asia Hospitality Human Resource – எனப்படும் ஆசிய விருந்தோம்பல்- மனத வள சங்கத்தின் ஒத்துழைப்புடன், ஆசியாவில் சுற்றுலா- உபசரிப்பு துறையை பிரபலப்படுத்தும் TIN Media நிறுவனம் ஏற்று நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் , தொழில்முனைவோர் , கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, சுற்றுலா துறையின் முன்னாள் துணையமைச்சர் Dato Muhammad Bakthiar Wan Chik, பினாங்கு ஆட்சிகுழு உறுப்பினர் Yeoh Soon Hin ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!