Latestஇந்தியாஉலகம்

ஆசிய சைக்கிளோட்டப் போட்டியில் நுருல் இஷா இஷாத்தி தங்கம் வென்றார்

புதுடில்லி, ஜூன் 20 – புதுடில்லியில் இந்திரா காந்தி சைக்கிளோட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆசிய Track சைக்கிளோட்ட போட்டியில் மலேசியாவின் இளம் வீராங்கனையான Nurul Izzah Izzati Mohd Asri 500 மீட்டர் Time Trial பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 19 வயதுடைய அவர் அப்போட்டியை 35.499 வினாடியில் முடித்து மலேசியாவிற்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனையாக திகழ்கிறார். அவருக்கு கடுமையான போட்டியை கொடுத்த தென் கொரியாவின் Kim Bomi வெள்ளிப் பதக்கத்தையும் , இந்தியாவின் Mayuri Dhanaraj வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். ஆடவருக்கான Keirin பிரிவில் மலேசியாவின்
Muhammad Shah Firdaus வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!